18 நாட்கள், 14 அமர்வுகள் - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 19 மசோதாக்கள் நிறைவேற்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2023 டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத் தொடர் 18 நாட்களில் 14 அமர்வுகளைக் கொண்டிருந்தது. அதன் விவரம்:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது மக்களவையில் 18 மசோதாக்களும், மாநிலங்களவையில் 17 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மக்களவையின் அனுமதியுடன் 3 மசோதாக்களும், மாநிலங்களவையின் அனுமதியுடன் ஒரு மசோதாவும் திரும்பப் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தொடரின் போது, 2023-24 ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கைகள் மற்றும் 2020-21-ஆம் ஆண்டுக்கான கூடுதல் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்புடைய நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் 12.12.2023 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, 05 மணி 40 நிமிட நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.

சுமார் 22 நிமிட விவாதத்திற்குப் பிறகு மாநிலங்களவை 19.12.2023 அன்று இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பியது. பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட நீதியை உறுதி செய்வதற்கான குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்களான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஆகியவற்றுக்குப் பதிலாக இந்திய குடிமைப் பாதுகாப்பு சட்டம், 2023, இந்திய நீதித்துறைச் சட்டம், 2023, இந்திய சாட்சிய சட்டம், 2023 ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில், விதி எண் 176-ன் கீழ் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தொடங்கி 10 மணி நேரம் 25 நிமிடங்களுக்கும் மேலாக ஒரு குறுகிய கால விவாதம் நடைபெற்றது. மக்களவையின் அலுவல்கள் தோராயமாக 74% ஆகவும், மாநிலங்களவையின் அலுவல்கள் தோராயமாக 79% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய மசோதாக்கள் பின்வருமாறு:

1.வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, 2023.
2.ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2023.
3.ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2023.
4.மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2023
5.ரத்து மற்றும் திருத்த மசோதா, 2023
6.டெல்லி சட்டங்களின் தேசிய தலைநகரப் பகுதி சட்டங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) இரண்டாவது (திருத்த) மசோதா, 2023.
7.தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா, 2023
8.பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா, 2023.
9.தொலைத்தொடர்பு மசோதா, 2023

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் அவையில் விளக்கம் அளிக்கக் கோரி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் மொத்தம் 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியும் கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்