மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தி பேசக் கூடாது: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய மரியாதை கிடைப்பதை உறுதி செய்ய அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சிகள் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது மேடைகளில் பேசும்போது, மாற்றுத் திறனாளிகளின் இயலாமையை சுட்டிக் காட்டுவது தொடர்பான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. அத்துடன் அரசியல் கட்சிகளின் இணையதளங்கள், சமூக ஊடகங்கள், பிரச்சாரங்கள் உள்ளிட்டவை மாற்றுத் திறனாளிகள் அணுகக் கூடியவையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளைக் குறிப்பிடும் போது, அவர்களின் உரிமை தொடர்பான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கலைச் சொற்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக அவர்களின் உடல் ரீதியிலான குறைபாடுகளைக் குறிக்கும் குருடு, செவிடு, நொண்டி உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால், மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தின் 92-வது பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. கட்சித் தொண்டர்களுக்கு மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் அரசியல் கட்சிகள் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் நிர்வாகிகள் பேசியதாக வரும் புகார்களை விசாரிக்க அரசியல் கட்சிகள் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்