திருமலையில் தேவஸ்தான பாதுகாவலர்களுக்கு திருநாமம் கட்டாயம்: தலைமை பாதுகாப்பு அதிகாரி உத்தரவு

By என்.மகேஷ் குமார்

திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் கட்டாயமாக திருநாமம் வைத்துக்கொள்ள வேண்டும் என தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் திருமலையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மிகவும் பவித்ரமாக விளங்கும் திருமலையின் பெருமையை காப்பது நம் அனைவரின் கடமையாகும். தேவஸ்தான ஊழியர்கள், அதிகாரிகள், உள்ளிட்ட அனைவரும் ஏழுமலையானின் பெருமையை பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்வது அவசியம்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் எதையும் திருமலைக்கு கொண்டுவரக் கூடாது. இதை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பவர்கள், பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு ஊழியர்கள் பக்தர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. , பாதுகாப்பு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக திருநாமம் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏழுமலையான் கோயிலில் வழக்கத்தை விட நேற்று பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. இதனால் சர்வ தரிசனத்தில் பக்தர்கள் சுவாமியை 3 மணி நேரத்தில் தரிசித்தனர். திவ்ய தரிசனம் மூலம் 2 மணி நேரத்திலும் ரூ.300 சிறப்பு தரிசனத்தின் மூலம் 2 மணி நேரத்திலும் ஏழுமலையானை தரிசித்தனர்.

படி திருவிழா

திருப்பதி தேவஸ்தானத்தின் தாசா சாஹித்ய அமைப்பினர் சார்பில் 3 மாதங்களுக்கு ஒரு முறை அலிபிரியிலிருந்து திருமலை வரை பக்த கோஷ்டியினர் படிகளுக்கு பூஜை செய்தவாறு திருமலைக்கு செல்வது வழக்கம்.

அதன்படி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், நேற்று அதிகாலை படிபூஜை செய்தவாறு திருமலைக்கு சென்றனர். இதில் 3,200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்