பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டம்: தமிழகத்துக்கு இதுவரை 8 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். 2024 மார்ச் 31-க்குள் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 95 லட்சம் வீடுகள் கட்டும் மத்திய அரசு திட்டத்தின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 கோடியே 94 லட்சம் வீடுகளுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்த அமைச்சர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளில் 13.12.2023 வரை 2 கோடியே 51 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின்படி மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 7,79,851 ஆகும். இவற்றில் 2021 – 2022-ல் 2,21,945 வீடுகளும், 2022 – 2023-ல் 37,427 வீடுகளும் பயனாளிகளுக்கு மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். மாவட்டம் வாரியாக மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ள வீடுகள் ஒதுக்கீட்டு எண்ணிக்கை விவரத்தையும் அவர் தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:

மாவட்டத்தின் பெயர் | மாநில அரசின் இலக்கு:

  1. அரியலூர் - 23,295
  2. செங்கல்பட்டு - 12,750
  3. கோயம்புத்தூர் - 2,813
  4. கடலூர் - 55,149
  5. தருமபுரி - 23,318
  6. திண்டுக்கல் - 6,928
  7. ஈரோடு - 7,460
  8. கள்ளக்குறிச்சி - 11,669
  9. காஞ்சிபுரம் - 31,575
  10. கன்னியாகுமரி- 2,366
  11. கரூர் - 5,520
  12. கிருஷ்ணகிரி - 19,029
  13. மதுரை - 7,953
  14. மயிலாடுதுறை - 11,417
  15. நாகப்பட்டினம் - 53,308
  16. நாமக்கல் - 8,556
  17. பெரம்பலூர் - 13,920
  18. புதுக்கோட்டை - 30,719
  19. ராமநாதபுரம் -18,906
  20. ராணிபேட்டை - 4,124
  21. சேலம் - 27,562
  22. சிவகங்கை - 11,136
  23. தென்காசி - 5,709
  24. தஞ்சாவூர் - 40,831
  25. நீலகிரி - 2,737
  26. தேனி- 1,865
  27. தூத்துக்குடி - 5,483
  28. திருச்சிராப்பள்ளி - 22,127
  29. திருநெல்வேலி .16,597
  30. திருப்பத்தூர்- 6,819
  31. திருப்பூர் - 4,206
  32. திருவள்ளூர் -20,790
  33. திருவண்ணாமலை - 49,496
  34. திருவாரூர்- 54,490
  35. வேலூர் - 35,008
  36. விழுப்புரம் -1,08,417
  37. விருதுநகர் - 7,752

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்