புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அக்கட்சி அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ளன. முதல் நடவடிக்கையாக எதிர்க்கட்சிகள் சார்பில் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டது. இக்கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் இதுவரை 3 சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், புதுடெல்லியில் இன்று 4-வது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அக்கட்சி அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார். அதில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பெகல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேசிய கூட்டணிக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதாகவும், இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக முகுல் வாஸ்னிக் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இக்குழுவை அமைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago