குற்றவாளிகளை அடையாளம் காண திருமலையில் செல்போன் ‘செயலி’

By என்.மகேஷ் குமார்

திருமலையில் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணபதற்காக வரும் 24-ம் தேதி ஒரு செல்போன் ‘செயலி’யை அறிமுகம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் 24-ம் தேதி ரத சப்தமி கொண்டாடப்பட உள்ளது. ‘மினி’ பிரம்மோற்சவம் என்றழைக்கப்படும் இந்த நாளில், உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதுகுறித்து தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரத சப்தமிக்கு பெருமளவில் பக்தர்கள் கூட்டம் திருமலைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாட வீதிகளில் ஒரே நாளில் 7 வாகன சேவைகளை காணும் வகையில் பக்தர்களுக்கு 11 வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிற்றுண்டி, குடிநீர், மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி 600 கண்காணிப்பு ஊழியர்களுக்கு குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து கொள்ளும் செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், கள்ளச்சந்தையில் லட்டு, தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் வழங்கும் தரகர்கள், திருட்டு தொழிலில் ஈடுபடுவோரின் முகம் இந்த செயலி மூலம் ஸ்கேன் செய்யப்படும்.

இதன் மூலம் இவர்களில் பழைய குற்றவாளிகளும் கண்டறியப்படுவர். மேலும் கண்காணிப்பு கேமராக்களும் அதிக அளவில் பொருத்தப்படும். இந்த நடவடிக்கைகளால் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தகுந்து பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

11 மணி நேரம் அடைப்பு

சந்திரகிரகணத்தையொட்டி, வரும் 31-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 9.30 மணி முதல் தொடர்ந்து 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது. இதேபோல திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலும் 31-ம் தேதி, காலை 9.30 முதல் இரவு 9.30 வரை நடை சாத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனால், ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் சந்திர கிரகணத்தன்று கிரகண கால அபிஷேகம் நடைபெற உள்ளதால், நடை திறந்தே இருக்கும் எனவும், பக்தர்கள் வழக்கம் போல தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்