தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு: மலையேறிகள் போர்க்கொடி

By ஏஎஃப்பி

தன்னந்தனியே எவரெஸ்ட் சிகரம் மற்றும் மலையேற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஓர் உயரதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.

நேபாள நாடாளுமன்றம் வியாழக்கிழமை கூடி, இமயமலை நாட்டின் மலையேற்ற ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதலை அளித்தது.

இதுகுறித்து நேபாள கலாச்சார துறை, சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து செயலாளர் மஹேஷ்வர் நீப்பானே ஏஎப்பியிடம்கூறியதாவது:

''தனியாக மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு தடைசெய்யப்படுவதற்கு ஏதுவாக இதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் முன்னதாக அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பாதுகாப்போடு மலையேறவும் இறப்பு எண்ணிக்கைகளை குறைக்கவும் இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அனுபவம் வாய்ந்த சுவிட்சர்லாந்து மலையேறி யூலி ஸ்டெக் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்பாராமல் தன் உயிரை விட நேர்ந்தது. எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நுப்சே சிகரத்தை நோக்கி மலை முகட்டுப் பாதையில் தன்னந்தனியாக அவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது செங்குத்தான அம்மலைப்பகுதியிலிருந்து கீழே விழுந்தார்.

ஆபத்தை விளைவிக்கும் பயணம்

இந்தத் தடையானது தனியாக மலையேறும் சவாலை அனுபவிப்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்கும், மலை உயரத்தில் பயன்படுத்தவேண்டிய ஆக்ஸிஜன் வாயுவைத் தவிர்த்து, உலகின் மக உயரமான சிகரத்தின் மீது பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பெருமளவில் வருமானம் ஈட்டும் வணிக நோக்கங்களோடு செல்ல விரும்புவர்களும் இத்தடைச் சட்டத்தை விமர்சிப்பார்கள்.

தங்கள் குறைபாடுகளை மறக்க, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டு வல்லமை மிக்க சாதனைகளை எட்ட நினைக்கும் இரண்டு கால்களும் இன்றி செயற்கைக் கால்களோடு வருபவர்களுக்கும் பார்வையற்ற மலையேறிகளுக்கும், தடை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது'' என்றார்.

மலையேறிகள் நேபாளம் முற்றுகை

இத்தடைச் சட்டம் குறித்த செய்தி அறிந்த ஆயிரக்கணக்கான மலையேறிகள் நேபாளத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் போரில் தனது கால்கள் இரண்டையும் இழந்த ஆர்வ மிக்க எவரெஸ்ட் மலையேறி ஹரி புத்தா மகார், ஒரு முன்னாள் கூர்க்கா ராணுவ வீரர் இந்த தடைச்சட்டம் பற்றி இம்மாத ஆரம்பத்தில் முடிவு எடுக்கப்பட்டபோதே, ''இந்தத் தடைச்சட்டம் பாரபட்சமானதாக உள்ளது.ஒருவேளை இந்த சட்டத்தை அமைச்சரவை நிறைவேற்றுமேயானால் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான பாரபட்சமான ஒரு செயலாகவே இது அமையும். மனித உரிமைகளை உடைக்கக் கூடியது இது'' என்று தனது ஃபேஸ்புக் பதிவில் மகார் குறிப்பிட்டிருந்தார்.

மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள்

நியூசிலாந்தைச் சேர்ந்த மார்க் இங்லிஸ், பனிப்பொழிவில் தனது கால்களை இழந்தவர், 2006-ல் 8,848 மீட்டர் (29,029 அடி) சிகரத்தில் உச்சத்தை அடைந்த முதல் மாற்றுத்திறனாளி ஆவார். பார்வை குறைபாடுமிக்க அமெரிக்க எரிக் வீயன்மயர் மே 2001 இல் எவரெஸ்டை அடைந்தார், அதன் பின்னர் அவரது சாதனையை முறியடிக்க யாருமின்றி, ஏழு கண்டங்களிலும், மிக உயர்ந்த சிகரங்களை அடைந்த ஒரே பார்வை குறைபாடுடைய நபர் ஆகவும் வெற்றிவாகை சூடினார்.

மலையேற உகந்த தட்பவெப்பம்

நேபாளம் 8,000 மீட்டர் நீளமுள்ள உலகின் உயரமான 14 சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் மலையேறுபவர்களுக்கு தெளிவான தட்பவெப்ப நிலைகளை தரக்கூடியதாக இமயமலையின் இச்சிகரங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 450 மலையேறிகள் இதில் 190 வெளிநாட்டவர்கள் மற்றும் 259 நேபாளிகள் - கடந்த ஆண்டு நேபாளத்தில் தெற்கில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர்.

தனியே சென்று மலைச்சிகரத்தை எட்டுவதுதான் சாதனை, இதை நேபாள அரசு தடைவிதித்துள்ளதே என புதிய சாதனை முயற்சிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருபவர்கள் தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்