வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம்-2 இன்று தொடக்கம்: திருக்குறள், மணிமேகலை மொழிபெயர்ப்பு நூல்களையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி யில் காசி தமிழ்ச் சங்கமம்-2-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் திருக்குறள், மணிமேகலை நூல்களின் மொழி பெயர்ப்பு புத்தகங்களையும் அவர் வெளியிடவுள்ளார்.

உ.பி.யின் வாரணாசியில் கடந்த ஆண்டு டிசம்பரில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. தனது நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சி ஒரு மாதம் வரை நீடித்தது. வாரணாசி நகரத்துக்கு தமிழ்நாட்டுடன் உள்ள தொன்மையான தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில் மத்திய கல்வித்துறை இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த வருடமும் அதே நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கி 13 நாட்கள் வரை நடைபெற உள்ளது. இதையும். கடந்த முறையை போல், உ.பி. அரசு மற்றும் இதர சில மத்திய அமைச்சகங்கள் இணைந்து நடத்துகின்றன.

பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சியை மீண்டும் பிரதமர் மோடியே தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்துகிறார். இதற்காக இன்று பிற்பகல் வாரணாசி வரும் பிரதமர் அங்கு 2 நாள் தங்கி வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இதற்காக தமிழகத்திலிருந்து பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 1,400 பேர் 7 ரயில்களில் அரசு செலவில் அழைத்து வரப்படுகின்றனர். இவர்கள் இந்த 5 நாள் பயணத்தின்போது இந்த முறையும் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்த சங்கமம் இந்த முறை. கங்கையின் கரைகளில் ஒன்றான நமோ காட்டில் நடைபெறுகிறது.

காசி தமிழ்ச் சங்கமம் -2 நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி. கன்னியாகுமரி முதல் காசி வரை செல்லும் புதிய ரயில் சேவையையும் காணொலி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார். 'இத்துடன் மத்திய அரசின் 1 செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் பதிப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களையும் பிரதமர் வெளியிடுகிறார்.

இதில், மாற்றுத்திறனாளிகள் படிக்கும் வகையில் பிரெய்லி முறையிலான திருக்குறள். சங்க இலக்கியம் மற்றும் இலக்கணங்களில் 46 நூல்கள் 2 இடம் பெற்றுள்ளன. 10 இந்திய மொழிகள் மற்றும் 5 வெளிநாட்டு மொழிகளிலும் " திருக்குறள் நூல்களை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சங்கத்தின் தலைவரும் காசி தமிழ்ச் சங்கமம்-2-ன் அமைப்பாளருமான பேராசிரியர் பத்ம சாமுகிருஷ்ண சாஸ்திரி கூறும்போ து, ‘‘இந்த முறை புதிதாக காசி தமிழ்ச் சங்கமம்-2-ல் பல புதிய நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. இந்நாட்களில் தமிழ்நாட்டிலும் பல இடங்களின் கல்வி நிலையங்களில் சங்கமம் பற்றிய கருத்தரங்குகளும், விவாதங்களும் நடைபெற உள்ளன.

இதில், காசி காண்டம், அகத்திய முனிவர் மீதான சிறப்புக் கூட்டங்களும் உண்டு. சித்த மருந்துகளின் தந்தையான அகத்தியரின் ஜென்ம ஜெயந்தி டிசம்பர் 29-ல் கொண்டாடப்படுகிறது. வாரணாசியுடன் இணைந்த தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு இந்த சங்கமத்திலும் முக்கியத்துவம் உண்டு. தமிழ்நாட்டிலிருந்து வருபவர்களுடன் வாரணாசி பொதுமக்கள் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமருடன் உ.பி.மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து வாரணாசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையிலான ஆன்மிகம், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. சங்கமத்தின் நிகழ்ச்சிகளில் தமிழர்களான நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன், ஜார்க்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும், மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழக ஆளுநரான என்.ரவியும் டிசம்பர் 19, 20 ஆகிய 2 தினங்களுக்கு வாரணாசிக்கு வந்து பங்கேற்கவுள்ளார்.

நிகழ்ச்சிக்கான முக்கிய ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு வாரணாசி மாவட்ட ஆட்சியரான எஸ்.ராஜலிங்கம் எனும் தமிழரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE