பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு முஸ்லிம்களுக்கு எதிராகத்தான் , கர்னி சேனா போன்ற அமைப்புகளிடம் இருக்காது என்று அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடுமையாக விமர்ச்சித்தார்.
'பத்மாவத்' திரைப்படம் இன்று நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக குஜராத், பிஹார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கர்னி சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹரியாணா மாநிலம் குருகிராமில் பள்ளிப் பேருந்தை அடித்து நொறுக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு மக்களவை எம்.பி. அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''பாஜக நாட்டில் 'பகோடா' அரசியல் நடத்தி வருகிறது. 'பத்மாவத்' திரைப்படம் திரையிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தபோதிலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்களுக்கு பிரதமர் மோடியின் அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறது. ஆனால், அந்த போராட்டக்காரர்களோ பள்ளிக் குழந்தைகள் படிக்கும் பேருந்துகளை அடித்தும், சேதப்படுத்தியும், தீவைத்து கொளுத்தியும், சட்டத்தை கையில் எடுத்தும் செயல்படுகிறார்கள். இவை அனைத்தும் பாஜகவின் மறைமுகமான ஆதரவினால் நடக்கிறது. போராட்டம் நடத்தும் மக்கள் முன் பிரதமரும், அவரின் கட்சியும் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு முஸ்லிம்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது. தனது அமைச்சரவையில் இருக்கும் எந்த முஸ்லிம் உறுப்பினரிடமும் ஆலோசிக்காமல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமல், எந்த முஸ்லிம் அமைப்பிடமும் ஆலோசிக்காமல், முத்தால் தடை மசோதாவை மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
திரைப்படங்கள் எடுத்தாலும் அதில் பல காட்சிகளை நீக்கியும், பெயரை மாற்றியும் நடவடிக்கை எடுக்கிறது. சில குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளைத் திருப்திப்படுத்த படத்தின் நாயகிக்கு வித்தியாசமான ஆடைகள் அணிவிக்கப்படுகிறது. என்ன மாதிரியான அரசியல் இது?''
இவ்வாறு அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago