அமைச்சர் அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது: ராகுல் காந்தி விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. வரலாற்றை அவர் மாற்றி எழுதி வருகிறார்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புஅந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனை வரவேற்று மாநிலங்களவையில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா நேற்றுமுன்தினம் பேசும்போது, “1948-ல்பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஜம்மு காஷ்மீர் முழுவதையும் திரும்பப் பெறாமல்ஐ.நா.வின் போர் நிறுத்தத்தை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்றுக்கொண்டது தவறு” என்றார்.

இதற்கு முன் கடந்த 6-ம் தேதிமக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த இரு தவறுகளால் காஷ்மீர் மக்கள் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டனர். நேரு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்” என்றார்.

இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று கூறும்போது, “பண்டித நேருதனது வாழ்நாளை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்தவர். அவர் பலஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவர் வரலாற்றை மாற்றி எழுதுவதால் அவருக்கு வரலாறு தெரிந்திருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்