கர்நாடக காங்கிரஸ் அரசு விரைவில் கவிழும்: டி.கே.சிவகுமார் 60 எம்எல்ஏக்களுடன் கட்சி தாவுகிறார் - குமாரசாமி குற்றச்சாட்டு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த மே மாதம்நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்றது. முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும் மஜத மாநிலத் தலைவருமான குமாரசாமி நேற்று கூறியதாவது: சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது அக்கட்சி எம்எல்ஏக்களுக்கே நம்பிக்கை இல்லை. ஆட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்தால் போதும் என நினைக்கிறார். மத்திய அரசின் அமைப்புகள் தொடுத்த வழக்குகளில் இருந்து அவரால்தப்பிக்க முடியாது. மகாராஷ்டிராவில் நடந்ததை போல கர்நாடகாவிலும் நடக்கும். அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள 60 எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு தாவ இருக்கிறார். எனவே இந்த அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது. வேறு சில அமைச்சர்களும் மூத்தஎம்எல்ஏக்களும் முன்பை போலவேகட்சி தாவ தயாராக இருக்கிறார்கள். இதனை சித்தராமையாவால் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

டி.கே.சிவகுமாரின் பெயரை குறிப்பிடாமல் குமாரசாமி இத்தகைய குற்றச்சாட்டை கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE