தெலங்கானாவில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) ஒருவர் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டத்தில் பாயும் காகிவாகு ஆற்றில், டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரியான போயனி சாயுலுக்கு (40) நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்தப் பகுதிக்கு போயனி சாயுலு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, காரேகம் கிராமம் அருகே மணல் ஏற்றிக்கொண்டு சென்ற சில டிராக்டர்களை போயனி சாயுலு தடுத்து நிறுத்தினார். இதனால், அவருடன் மணல் கொள்ளையர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள், போயனி சாயுலு மீது டிராக்டரைக் கொண்டு மோதியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அங்கிருந்து மணல் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago