பள்ளிச் சிறுமி பலாத்காரம்: பெங்களூரில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி

பெங்களூரில் 6 வயது மாணவி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதை கண்டித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்தப் போராட்டத்தை மேற்கொண்ட அகில பாரத்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

பெங்களூரில் விப்ஜியார் என்ற தனியார் பள்ளியில், 6 வயது மாணவி, அதே பள்ளியை சேர்ந்தவரால், பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 31 வயது மதிப்பு மிக்க, ஸ்கேட்டிங் பயிற்சியாளர் முஸ்தஃபா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இன்று பாரத்திய வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பினர் பெங்களூரு பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது, உண்மையான குற்றவாளியை அடையாளம் கண்டு, விரைவில் மிக கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டக்காரர்கள், பள்ளி நிர்வாகமும் இந்த மோசமான செயலுக்கு காரணம் என்று கூறி கோஷம் எழுப்பினர்.

அப்போது ஏ.பி.வி.பி அமைப்பினர் தடையை மீறி பள்ளி வளாகத்தினுள் நுழைய முயன்றதால், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் களையச் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட சில ஏ.பி.வி. அமைப்பினர் கூறும்போது, "நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு பள்ளி நிர்வாகம், வந்து பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் இங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகள் எங்கள் மீது தடியடி நடத்துகின்றனர்" என்றனர்.

ஆனால், காவல்துறையினர் தரப்பில், தடியடி எதுவும் நடத்தப்படவில்லை என்றும், பெண் காவலர்களை வைத்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தவே செய்தோம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதே பிரச்சினையை முன்வைத்து, பெங்களூரின் சுதந்திர பூங்கா அருகே இன்று பாஜக இளைஞரணியினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கர்நாடகத்தில், காங்கிரஸ் அரசு பாலியல் கொடுமைகளை தடுக்கும் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று பாஜகவினர் குற்றம்சாட்டினர.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE