கடந்த டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமியை தரிசிக்க பக்தர்கள் 30 மணி நேரம் வரை காத்திருக்க நேரிட்டது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனகாபல்லியிலிருந்து அப்பாராவ் என்பவர் தனது குடும்பத்துடன் வைகுண்ட ஏகாதசிக்கு ஏழுமலையானை தரிசிக்க வந்துள்ளார். இவர்கள் சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்கச் செல்லும்போது, கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர். இதில் நட்சத்திரா என்ற 2 வயது பெண் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது.
இதை அறிந்த தேவஸ்தான அதிகாரிகள், அப்பாராவ் குடும்பத்தினரை தனியாக அழைத்து சமாதானம் செய்துள்ளனர். மேலும் நிதியுதவி மற்றும் வாகன ஏற்பாடு செய்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளனர். அதிகாரிகள் ரகசியம் காத்ததால் இந்த தகவல் தாமதமாக வெளிவந்துள்ளது.
ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 29, 30 தேதிகளில் மட்டும் 1.75 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago