கடந்த 11 சட்டப் பேரவைத் தேர்தல்களில் வீடுகளில் இருந்து வாக்களித்த 3.30 லட்சம் முதியோர்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தெலங்கானா தேர்தலில் 80வயது நிரம்பிய முதியோர் வீட்டில்இருந்து வாக்களிக்க தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. தலைநகர் ஹைதராபாத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.

அதற்கு முன்னதாக ம.பி,சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான்,தெலங்கானா, குஜராத், இமாச்சல், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா,கர்நாடகா ஆகிய 11 சட்டப் பேரவைத் தேர்தல்களில் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி கடந்த 11 சட்டப் பேரவைத் தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்ட 3.30 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வாக்களித்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், 80 வயது நிரம்பிய முதியோரின் வீடுகளுக்கே சென்றுவாக்குச் சீட்டுகளைக் கொடுத்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

2.6 லட்சம் முதியோரும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளும் இந்த முறையில் வாக்களித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE