மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல்: பெரும்பான்மை இலக்கைக் கடந்து முந்தும் ஜோரம் மக்கள் இயக்கம்

By செய்திப்பிரிவு

அய்ஸ்வால்: மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு (எம்என்எப்) பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 10 தொகுதிகளில் மட்டுமே அது முன்னிலை வகிக்கிறது. ஜோரம் மக்கள் இயக்கம் 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 3 இடங்களிலும் காங்கிரஸ் ஓரிடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

மொத்தம் 13 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை வேறு தேதிக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 70 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அந்த மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆளும் தேசிய முன்னணிக்கும் (எம்என்எப்) கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜோரம் மக்கள் இயக்கத்துக்கும் Zoram People's Movement 23 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE