நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளால், பாஜக தனித்து ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 3-ஆக குறைந்துள்ளது.
உத்தராகண்ட், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், குஜராத், கோவா, அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், 4 மாநில முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பாஜக தனித்து ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. இதோடு மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கிறது.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்து, தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இனி கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 3 மாநிலங்கள் மட்டும் காங்கிரஸ் தனித்து ஆட்சி செய்யும் மாநிலங்களாக இருக்கும். இது தவிர பிஹார் மற்றும் ஜார்கண்ட் கூட்டணி அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது.
இந்த தேர்தல் முடிவுகள் மூலம் , வட இந்தியாவில் மிகப் பெரிய எதிர்கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளதால், வட இந்தியாவில் மிகப் பெரிய எதிர்கட்சி ஆம் ஆத்மி’’ என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜாஸ்மின் ஷா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டில் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவை தேர்தலும் நிலுவையில் உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பல எம்.பிக்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அவர்களின் மக்களவை தொகுதிகள் காலியாகும். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், தற்போது காலியாகும் மக்களவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago