“நான் ம.பி. மக்களை நம்புகிறேன்... காங்கிரஸ் நிச்சயம் வெல்லும்” - கமல்நாத்  நம்பிக்கை

By செய்திப்பிரிவு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் வாக்குகள் எண்ணப்பட்டும் வரும் நிலையில், 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சம் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தலைவர் கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், "நான் தேர்தல் போக்குகளை பார்க்கவில்லை. முற்பகல் 11 மணி வரை எந்தப் போக்குகளையும் பார்க்கத் தேவையில்லை. நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மத்தியப் பிரதேச வாக்காளர்களை நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். பார்க்க > மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகள்

முன்னதாக, 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 17ம் தேதி நடந்த வாக்குப்பதிவுகளில் பாதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆட்சி அமைக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநிலத்தில் அடுத்து ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே வாக்கு எண்ணிக்கைத் தொடங்குவதற்கு முன்பாக கமல்நாத்தை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. போபாலில் காங்கிரஸ் அலுவகத்துக்கு முன்பு, "முதல்வர் பொறுப்பேற்ற கமல்நாத்துக்கு வாழ்த்துக்கள்" என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

கடந்த 2003ம் ஆண்டிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வரும் மாநிலத்தில் பாஜக ஐந்தாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று நம்பப்படுகிறது. அங்கு நடந்த 4 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் 3ல் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் வியாழக்கிழமை கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் பலனத்தினை அவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்களின் கடின உழைப்பால் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அதிக அளவில் வாக்களித்திருக்கிறார்கள். டிச.3ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது மக்கள் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆணையிடுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்