ஹைதராபாத்: தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி முகம் கண்டு ஆட்சியைக் கைப்பற்றுகிறது. அதேவேளையில், ஆளும் பிஆர்எஸ் கட்சி தோல்வியைத் தழுவியதால், ஹாட்ரிக் ஆட்சி வாய்ப்பை நழுவவிட்டுள்ளார் கேசிஆர்.
தெலங்கானா
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றிற்கு ஒரே கட்டமாக நவம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 2,290 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 221 பேர் பெண்கள், ஒருவர் 3-ம் பாலினத்தை சேர்ந்தவர். மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள். இதில், ஆண்கள் 1.62கோடி பேரும், பெண்கள் 1.63 கோடி பேரும், 3-ம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 2,676 பேர். இம்முறை புதிதாக வாக்களிப்பவர்கள், அதாவது, 18-19 வயதினர் மட்டும் 9.99 லட்சம் பேர்.
வாக்குப்பதிவுக்காக மொத்தம் 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பதற்றமானதாக கண்டறியப்பட்ட 4 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார், ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 75 ஆயிரம் போலீஸாரும், 375 கம்பெனி துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 71.34% வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவியது. அங்கு கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியது.
» “தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என நம்புகிறோம்” - டி.கே.சிவக்குமார்
» நாகார்ஜுன சாகர் அணை பிரச்சினை | ஆந்திரா - தெலங்கானா மோதலால் பதற்றம் - மத்திய அரசு தலையீடு
தெலங்கானாவில் சிறுபான்மையினர் நலனுக்கான பட்ஜெட் தொகை ரூ.4,000 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும் என்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும் ஆறு மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி என்று கணித்த நிலையில் அதுவே மெய்ப்பட அங்கே காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் தொண்டர்கள் இனிப்புகளைப் பரிமாறியும், நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேசிஆர் என்ற தெலங்கானாவின் அடையாளத்தை வீழ்த்த காங்கிரஸின் ஆயுதமாக இருந்தவராக அறியப்படுகிறார் அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி. தெலங்கானாவில் காங்கிரஸின் வெற்றியைத் தொடர்ந்து அத்தனை ஊடக கவனமும் ரேவந்த் ரெட்டியை நோக்கித் திரும்பியுள்ளது. | வாசிக்க > தெலங்கானாவில் காங்கிரஸ் ‘சம்பவம்’ செய்ய வித்திட்ட ‘வித்தைக்காரர்’ ரேவந்த் ரெட்டி யார்?
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago