Election Results 2023: ராஜஸ்தானில் ஆட்சியை வசப்படுத்தியது பாஜக - ஆளும் காங். படுதோல்வி

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை வசப்படுத்தியிருக்கிறது. ஆளும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் சச்சின் பைலட் இடையேயான உட்கட்சி பூசல் தேர்தல் முடிவில் எதிரொலித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜஸ்தான் இலக்கு 100
கட்சிகள் முன்னிலை
பாஜக 115
காங்கிரஸ் 69
இதர கட்சிகள் 15

ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில், கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. எஞ்சிய 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 51,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 5.25 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 2.73 கோடி பேர் ஆண்கள், 2.52 கோடி பேர் பெண்கள். மொத்தம் 1,862 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 61,021 பேர் ஏற்கெனவே வீட்டில் இருந்தபடி வாக்களித்தனர். தேர்தலில் 75.45 சதவீதம் வாக்குகள் பதிவானது.

ராஜஸ்தானில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. அடுத்த ஆட்சியை அமைக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டது. கருத்துக் கணிப்புகள் சில ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும் சில பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்த நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் முழுமையாக பாஜகவுக்கு சாதகமாக சென்றது. | வாசிக்க > வசுந்தரா ராஜே அடுக்கும் காரணங்களும், காங். ‘சறுக்கல்’ பின்புலமும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE