சீன மாஞ்சா நூலுக்கு உத்தரப் பிரதேசத்தில் தடை

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி யில், பட்டம் பறக்கவிடுவதற்கான ‘சீன மாஞ்சா’ நூல் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாது காப்பு மற்றும் உள்நாட்டு மாஞ்சா நூல் உற்பத்தியாளர்களைக் கவனத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட்டத்துக்கான நூல் சந்தையில் நாட்டிலேயே மிகப்பெரியது பரேலி ஆகும்.

பரேலி மண்டல ஆணையாளர் ரவீந்தர நாயக், சீன மாஞ்சா நூல் விற்பனைக்கு தடை விதித்து உத்தர விட்டுள்ளார். மேலும், இந்த தடை யுத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அமல்படுத்த வேண் டும் எனவும் அவர் கேட்டுக்கொண் டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார், இத்தடையை அமல்படுத்த சிறப் புக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

மத்திய ஜவுளித்துறை இணை யமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் சமீபத்தில் இப்பிரச்சினையை எழுப் பினார். ‘இறக்குமதி செய்யப்படும் சீன மாஞ்சா நூல்களால் உள் நாட்டு சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். சீன மாஞ்சா நூல்கள் மின்சார விபத்து மற்றும் மின்தடைக்குக் காரணமாக அமைகின்றன’ என்று அவர் புகார் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் எழுதிய அவர், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நைலான் நூல்கள் எளிதில் மக்காதவை. உள்ளூர் மக்களின் வேலைவாய்ப் பைக் குறைப்பவை. ஆகவே, அவற் றின் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று வலி யுறுத்தியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE