திருப்பதி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.27) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி நேற்றிரவு ஹைதராபாத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு, தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அங்கு ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் ஜெகன்மோகன், துணை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் பெ. ராமசந்திராரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, எம்பிக்கள் மிதுன் ரெட்டி, குருமூர்த்தி, ரெட்டப்பா, டிஜிபி ராஜேந்திர நாத், முதன்மை செயலாளர் ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், பிரதமர் மோடி சாலை மார்க்கமாக திருமலை சென்றடைந்தார். அங்கு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி உட்பட பலர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர்.
இரவு திருமலையில் தங்கிய பிரதமர் மோடி இன்று காலை 8 மணிக்கு சாமி தரிசனம் செய்ய திருமலை திருப்பதி கோயிலுக்கு பிரதமர் மோடி வந்தார். அங்கே சாமி தரிசனம் செய்தார். அவருக்கு வேத மந்திரங்கள் முழங்கி பண்டிதர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சாமி தரிசனத்தை முடித்துக் கொண்ட அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
தெலங்கானா மாநில தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. இதனால் அனைத்து கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என பலர் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு, சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில், பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக மேதக் மாவட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ”மக்களை சந்திக்காத, தலைமைச் செயலகத்துக்கே வராத, பண்ணை வீட்டிலேயே வசதியாக வாழும் ஒரு முதல்வர் நமக்கு தேவையா? சந்திரசேகர ராவ் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளார். அவரை விவசாயிகள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள். கடவுளே கூட மன்னிக்கமாட்டார்” என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago