''பயங்கரவாதத்தை இந்தியா நசுக்கிவிட்டது'' - மோடியின் மன் கி பாத் உரை

By செய்திப்பிரிவு

டெல்லி: பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைவு கூர்ந்தார். அதே சமயம் ”நவம்பர் 26 ஆம் தேதி முக முக்கியமான நாள். 1949 ஆம் ஆண்டு இதே நாளில்தான் அரசியல் நிர்ணய சபை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நாளில் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதன் 100-வது நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் ஒலிபரப்பானது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைவு கூர்ந்தார். "நவம்பர் 26 ஆம் தேதியை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த நாளில்தான் நாடு மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால், அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு, பயங்கரவாதத்தை நசுக்கியது இந்த நாட்டின் திறன் மற்றும் துணிச்சல்தான். உயிர் நீர்த்த துணிச்சலான தியாகிகளை இந்த தேசம் நினைவு கூர்கிறது.

அதே சமயம் நவம்பர் 26 ஆம் தேதி முக முக்கியமான நாள். 1949 ஆம் ஆண்டு இதே நாளில்தான் அரசியல் நிர்ணய சபை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நாளில் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தைத் உருவாக்க இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் ஆனது. சமீபத்திய திருவிழாக்களின் போது சுமார் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பு. தண்ணீரைப் பாதுகாப்பது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் குறைவானதல்ல. தண்ணீரை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு. தேசத்தை கட்டியெழுப்புவதில் பொதுமக்களும் பங்கு கொள்ளும்போது, அது நாட்டை முன்னேற்ற பாதைக்கு கூட்டி செல்கிறது. இன்று, இந்தியாவில் மக்கள் பல மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியா நிறைய சாதனைகளை புரிந்துள்ளது” என்றார்.

சில குடும்பங்கள் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவது குறித்து கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, இதுபோன்ற நிகழ்வுகளை நாட்டிற்குள்ளே நடத்த வேண்டும் . UPI டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் மக்களை வலியுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்