உத்தராகண்ட் சுரங்கப் பாதை மீட்புப் பணி - யார் இந்த அர்னால்டு டிக்ஸ்?

By செய்திப்பிரிவு

உத்தரகாசி: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்க ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் வரவழைக்கப்பட்டு உள்ளார். இவர் சம்பவ இடத்துக்கு வந்த பிறகே மீட்புப் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டது.

பிரிட்டனில் பள்ளிக் கல்வி, ஆஸ்திரேலியாவில் புவியியல் என்ஜீனியரிங் கல்வி பயின்ற அர்னால்டு டிக்ஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்க கட்டுமான துறையில் கோலோச்சி வருகிறார். தற்போது அவர் சர்வதேச சுரங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு சுரங்கப் பாதை திட்டங்களுக்கு அவர் ஆலோசகராக இருந்துள்ளார்.

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைக்காக சுரங்கப் பாதை அமைக்கப்பட்ட போது அர்னால்டு டிக்ஸ் டெல்லிக்கு நேரடியாக வந்து ஆலோசனைகளை வழங்கினார். ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு சுரங்கப்பாதை விபத்து மீட்புப் பணிகளுக்கு அவர் தலைமையேற்று இருக்கிறார். தற்போது உத்தராகண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணியின் முக்கிய ஆலோசகராக அர்னால்டு டிக்ஸ் செயல்பட்டு வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE