அதானி மீதான புகாரில் ஆதாரம் எங்கே​? - உச்ச நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதானி - ஹிண்டன்பர்க் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கின் மனுதாரர் பிரசாந்த் பூஷனிடம் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மை என எடுத்துக் கொள்ள வேண்டும்? அதேநேரம், அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கவும் இல்லை. அதானி குழுமத்துக்கு எதிராக என்ன ஆதாரம் உள்ளது என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

செபி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “வெளிநாட்டு அறிக்கைகளால் இந்திய கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது தற்போது புதிய போக்காக மாறி வருகிறது’’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE