புதுடெல்லி: சமூக வலைதளங்களில் டீப்ஃபேக் உள்ளடக்கங்கள் பகிரப்படுவதைத் தடுக்க புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகிற நிலையில், அவற்றைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் போலி புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய போலி உருவாக்கங்கள் ‘டீப்ஃபேக்’ என்று அழைக்கப்படுகின்றன.
பிரதமர் கவலை: சில நாட்களுக்கு முன்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. டீப்ஃபேக்உள்ளடக்கங்கள் கவலையளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில் டீப்ஃபேக் தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்கள் கலந்தாலோசனை நடந்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான கூட்டம்மத்திய ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
» விநாடிக்கு 2,700 கனஅடி நீர் காவிரியில் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை
» பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பதில் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
இந்தக் கூட்டத்தில் சமூக வலைதள நிறுவனங்கள், செயற்கை நுண்னறிவு தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
டீப்ஃபேக் புகைப்படங்கள், வீடியோக்களை அடையாளம் காண்பது, அத்தகைய உள்ளடக்கங்கள் பதிவிடப்படுபவதை தடுப்பது, அது குறித்து புகார் அளிக்கும் கட்டமைப்பு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை சார்ந்து அந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
அபராதத்துடன் நடவடிக்கை: இதுகுறித்து, அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “டீப்ஃபேக் என்பது ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பதிவுகள் இடுபவர்களும் அந்தத் தளங்களும் பொறுப்புடன் இருப்பது அவசியம். டீக்ஃபேக் உள்ளடக்கங்களைத் தடுக்க புதிய விதிமுறைகள் அவசியம் என்பதை தற்போதைய சூழல் உணர்த்துகிறது.
இது தொடர்பாக புதிய சட்டம் விரைவில் உருவாக்கப்படும். டீப்ஃபேக் உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் மீதும் அதை அனுமதிக்கும் தளங்கள் மீதும் அபராதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago