கழிப்பறை கட்டாவிட்டால், பொங்கல் விடுமுறைக்கு தாங்கள் வீட்டிற்கு வரப் போவதில்லை என்று ஆந்திர மாநிலம் வாரங்கலில் உள்ள அரசுப் பள்ளி விடுதி மாணவிகள் தங்களின் பெற்றொருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பாமூரு கிராமத்தில் கஸ்தூரிபாய் அரசுப் பள்ளி விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் கழிப்பறைகள் அமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, வீடுகளில் கழிப்பறைகளை அமைப்பதன் அவசியத்தை உணர்ந்த அந்த மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் இதனை வலியுறுத்தி ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கழிப்பறை கட்ட அரசு உதவி செய்கிறது. அப்படியிருந்தும், வீடுகளில் நீங்கள் கழிப்பறை அமைக்கவில்லை. இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, உடனடியாக வீடுகளில் கழிப்பறைகள் கட்டாவிட்டால் வருகின்ற பொங்கல் விடுமுறைக்கு நாங்கள் வீட்டிற்கு வர மாட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலைில், தங்கள் மகள்களின் கடிதங்களைக் கண்ட பெற்றோர்கள், உடனடியாக அவரவர் வீடுகளில் கழிப்பறைக் கட்ட தொடங்கியுள்ளனர். மேலும், இதுகுறித்த தகவலையும் தங்கள் மகள்களுக்கு அவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். இதனால், இந்த பொங்கல் பண்டிகைக்கு தங்கள் ஊர்களுக்குச் செல்ல அந்த மாணவிகள் தயாராகி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago