ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளு டன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து பாதுகாப்பு படையினர்கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டம் தர்மசாலில் பாஜி மால் பகுதியில் தீவிரவாதிகள் மறைவிடம் குறித்த தகவலையடுத்து அந்த பகுதியை நேற்று முற்றுகையிட்டு ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது, தீவிரவாதிகளுக் கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. துரதிருஷ்டவசமாக இந்த மோதலில் இரண்டு ராணுவ கேப்டன்கள் மற்றும் இரண்டு வீரர்கள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த வீரர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
பாஜிமாலில் தாக்குதல் நடத்திய தீவிவராதிகளில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வழிபாட்டு தலத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நிலைமையை சமாளிக்க கூடுதல்படைகள் வரவழைக்கப்பட் டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
» காஷ்மீர் எல்லையில் 104 அடி உயர தேசியக் கொடி
» நிமோனியா பாதிப்பை போக்குவதற்காக ம.பி.யில் ஒன்றரை மாத குழந்தையின் உடலில் 40 முறை கம்பியால் சூடு
எல்லையோர மாவட்டங்களான ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago