பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்

By அசோக்குமார்

ஹரியானா மாநிலத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் உள்ள யமுனா நகரில் சுவாமி விவேகானந்தா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முதல்வராக ரிது சப்ரா பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அந்த மாணவரை பள்ளி முதல்வர் ரிது சப்ரா அழைத்து கண்டித்துள்ளார்.

இந்நிலையில், பள்ளியில் இன்று காலையில் ஆசிரியர்-பெற்றோர் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. அப்போது, முதல்வரின் அறைக்குள் சென்ற அந்த 12-ம் வகுப்பு மாணவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் 4 முறை சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் முதல்வர் சரிந்து உயிரிழந்தார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு முதல்வர் அறை அமைந்திருக்கும் வளாகத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்து தப்பிக்க அந்த 12-ம் வகுப்பு மாணவர் முயன்றபோது, அந்த மாணவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த மாணவருக்கு சமீபத்தில்தான் 18வயது நிறைவடைந்தது.

இது குறித்து யமுனா நகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கலியா தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பள்ளி முதல்வரை அந்த 12-ம் வகுப்பு மாணவர் 4 ரவுண்டுகள் சுட்டுள்ளார். அதில் 3 குண்டுகள் முதல்வரின் முகம், தோள்பகுதி, மார்பு ஆகிய பகுதிகளில் பாய்ந்து உயிரிழக்க வைத்துள்ளது. இந்த துப்பாக்கி லைசன்ஸ் உடைய துப்பாக்கியாகும். அந்த மாணவரின் தந்தை ஒரு நிதிநிறுவனம் நடத்தி வந்ததால், பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் பெற்று இதை வைத்து இருந்தார். துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த மாணவர்தப்பி ஓடும் போது, அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த மாணவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர் நன்றாக படிப்படிதில்லை, அதனால், முதல்வர் அவரை அழைத்து அடிக்கி கண்டித்தார் எனத் தெரியவந்தது. இந்தசம்பவம் தொடர்பாக மாணவர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மாணவரின் தந்தை மீதும் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்து மாணவரின் தந்தை தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்