உத்தராகண்ட்: உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகியுள்ளது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழு தொடர்பு ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர்.
10-வது நாளாக இன்று மீட்புப் பணி தொடரும் நிலையில் பைப் மூலம் எண்டோஸ்கோபி கேமராவை செலுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகி மீட்புக் குழுவினருக்கு உத்வேகத்தையும், தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
நேற்றிரவு இந்தத் தொடர்பை மீட்புக் குழு ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை ஒவ்வொருவராக கேமரா முன் வரச்சொல்லி அடையாளம் கண்டு மீட்புக் குழு பேசியுள்ளது. அதுமட்டுமல்லாது பைப் மூலம் முதன்முறையாக சூடான உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணாடிக் குடுவைகளில் சுடச்சுட கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அவர்களுக்கு உலர் கொட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்த நிலையில் தற்போது கிச்சடி வழங்கப்பட்டுள்ளது.
» சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு கிச்சடி உணவு: தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கி
தொழிலாளர்களுக்கு விரவில் மொபைல் போன்களும் சார்ஜர்களும் வழங்கப்படும் என்று மீட்புப் பணிகள் பொறுப்பு அதிகாரி கர்னல் தீபக் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் சுரங்கப் பாதையின் மேற்பகுதியில் செங்குத்தாக துளையிட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக குஜராத், ஒடிசாவில் இருந்து புதிதாக ராட்சத துளையிடும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி ஆலோசனை: சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பது தொடர்பாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி தினமும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி பிரதமர்மோடி நேற்றும் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொழிலாளர்களின் நிலவரம் குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago