சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 31-ம் தேதி 11 மணி நேரம்ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு

By என்.மகேஷ் குமார்

வரும் 31-ம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் 11 மணி நேரம் வரை நடை சாத்தப்படுவதாகவும் இதனையொட்டி சில ஆர்ஜித சேவைகளையும் ரத்து செய்வதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 31-ம் தேதி சந்திர கிரகணம் மாலை 5.18க்கு தொடங்கி இரவு 8.41 நிமிடத்திற்கு முடிவடைகிறது. இதனையொட்டி, 31-ம் புதன்கிழமை காலை 11 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட உள்ளதாகவும், பின்னர் மீண்டும் இரவு 9.30-க்கு நடை திறக்கப்பட உள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கோயில் நடை திறந்த பின்னர், ஆகம சாஸ்திர விதிகளின்படி, கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் வரும் 31-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் சுமார் 11 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. மேலும், வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கபிலேஸ்வரர் கோயில்

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற சைவ திருக்கோயிலான கபிலேஸ்வரர் கோயில், திருப்பதி தேவஸ்தானத்தால் பராமரிக்கப்படுகிறது. இக்கோயிலில் பிப்ரவரி 6-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தினமும் காலை, இரவு வேளையில் உற்சவ மூர்த்திகளான காமாட்சியம்மன் சமேத கபிலேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். பிப்ரவரி 5-ம் தேதி அங்குரார்பணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தையொட்டி, அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்