அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த சூழலில் இந்திய அணிக்கு எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்து ஆறுதல் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்திய அணி முதலில் பேட் செய்து 240 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி அரைசதம் கடந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. வார்னர், மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆகியோர் விரைந்து விக்கெட்டை இழந்தனர். இருந்தும் ஹெட் மற்றும் லபுஷேன் இணைந்து 192 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது. இதன் மூலம் ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா.
“உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் அபார செயல்திறன் கவனிக்கத்தக்கது. நீங்கள் மிக உற்சாகத்துடனும், சிறப்பாகவும் விளையாடி இருந்தீர்கள். அதன் மூலம் தேசத்துக்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள். நாங்கள் என்றென்றும் உங்கள் பக்கம் நிற்போம்” என பிரதமர் மோடி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
» மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் நிகரகுவாவின் ஷெய்னிஸ் பலாசியோஸ்!
» 6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்: இந்திய கனவை கலைத்த ஹெட் - லபுஷேன் இணை
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago