சண்டிகர்: தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஹரியாணா மாநில அரசு இயற்றிய சட்டத்தை, பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹரியாணா அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து குருகிராம் தொழில் கூட்டமைப்பு உள்ளிட்ட பலர் பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சந்தாவாலியா, ஹர்ப்ரீத் கவுர் ஜீவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஹரியாணா மாநில அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
முன்னதாக, குருகிராம் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஹரியாணா அரசு இயற்றி உள்ள சட்டம் சட்டவிரோதமானது; வேலை வழங்குபவர்களுக்கு உள்ள உரிமைகளுக்கு எதிரானது. திறமை மிக்கவராகவும், கல்வித் தகுதி உள்ளவராகவும், வேலைக்கு பொருத்தமானவராகவும், இந்தியராகவும், நாட்டின் எந்த பகுதியிலும் பணி செய்ய தயாராக இருப்பவராகவும் இருக்க வேண்டும் என்றுதான் அரசியல் சாசனம் கூறுகிறது. ஹரியாணா அரசு இயற்றி உள்ள சட்டம் அரசியல் சாசனத்தின் நெறிமுறைகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் முரணாக உள்ளது. இத்தகைய சட்டத்தின் மூலம் ஹரியாணா அரசு பொது நலன் கருதி அல்லாமல், ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது என வாதிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago