வங்கக் கடலில் உருவானது ‘மிதிலி புயல்’ - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றிருப்பதாகவும், நாளை (18.11.23) அதிகாலை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மிதிலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. மிதிலி புயல் தற்போது ஒடிசாவின் பாரதீப்பிற்கு கிழக்கே 190 கிமீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திகாவிலிருந்து தென்கிழக்கே 200 கிமீ தொலைவிலும், வங்கதேசத்தின் கெபுபாராவிலிருந்து தென்மேற்கே 220 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த நிலையில், நாளை (18.11.23) அதிகாலை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில், "இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வங்கதேச கடலோரப்பகுதிகளில் இன்று குறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஒடிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: வங்கக் கடலில் மிதிலி புயல் உருவாகியுள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்