தத்து கொடுத்தபின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வது சரியல்ல: மும்பை உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

மும்பை: தத்து கொடுத்த பின்பு, பாலியல்வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைக்கு மரபணு பரிசோதனை செய்வது, அந்த குழந்தையின் நலனுக்கு நல்லதல்ல என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வடக்கு மும்பையின் ஒசிவாரா பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த2020-ம் ஆண்டு 17 வயது சிறுமியுடன் பழகி அவரை கர்ப்பமாக்கினார். இதையடுத்து அந்த நபரைபோலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையை ஒரு தம்பதி தத்து எடுத்து வளர்த்து வருகிறது.

இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, குழந்தைக்குடிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டதா என நீதிமன்றம் கேட்டிருந்தது. இந்நிலையில் குற்றவாளி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனு செய்திருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 17 வயது என்றாலும், பரஸ்பர சம்மதத்துடன் தான், அந்த சிறுமியுடன் உறவில்இருந்ததாக குற்றவாளி தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஏ.சனாப் முன் கடந்த 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, டிஎன்ஏ பரிசோதனை தொடர்பாகபதில் அளித்த போலீஸார், குழந்தைஏற்கனவே தத்தெடுக்கப்பட்டு விட்டது. அதை தத்தெடுத்தவர்களின் விவரத்தை குழந்தைகள் காப்பகம்தரவில்லை என தெரிவித்தனர்.

எதிர்காலத்துக்கு நல்லதல்ல: அதன்பின் நீதிபதி சனாப் கூறியதாவது: குழந்தை தத்து எடுக்கப்பட்டபின், டிஎன்ஏ பரிசோதனை செய்வது அந்த குழந்தையின் நலனுக்கும், எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. 17 வயது சிறுமியின் பரஸ்பர சம்மதத்துடன்தான் உறவு கொண்டேன் என குற்றவாளி கூறும்விவாதத்தை இப்போது ஏற்க முடியாது. ஆனாலும், கடந்த 2020-ம்ஆண்டு முதல் குற்றவாளி சிறையில் உள்ளார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கு விரைவில் முடிவடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை இதற்கு மேல் சிறையில் வைத்திருப்பது நல்லதல்ல. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சனாப் தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE