ஸ்ரீநகர்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 39 பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டம் கிஷ்த்வாரில் இருந்து நேற்று காலை ஜம்மு நோக்கி பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்து படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ட்ருங்கல்-அசார் அருகே சாலையில் இருந்து சறுக்கியது.
இதையடுத்து அந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த பயங்கர விபத்தில் 39 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் காயமடைந்தனர். இதில் 6 பயணிகளின் நிலைமை கவலைக்கிடமாகஉள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. காயமடைந்த அனைவரும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவ தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.2 லட்சம் இழப்பீடு: பேருந்து விபத்தில் உயிரிழந் தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் சேவை: காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல ஹெலிகாப்டர் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, ‘‘காயமடைந்தவர்கள் தேவைக்கேற்ப மாவட்ட மருத்துவமனை கிஷ்த்வார் மற்றும் ஜிஎம்சி தோடாவுக்கு மாற்றப்பட உள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை மாற்ற ஹெலிகாப்டர்சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அவர்களுக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் மற்ற மருத்துவ மனைகளுக்குமாற்றப்படுவர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago