ம
காத்மா காந்தியைச் சுட்டது வெளியில் இருந்து வந்த நான்காவது குண்டு என்றொரு கருத்தைச் சொல்லி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் டாக்டர் பங்கஜ் பத்னீஸ். இந்தூரைச் சேர்ந்த இவர் சுதந்திரப் போராட்ட வீரர் வி.டி.சாவர்க்கரின் தீவிர அனுதாபி. இவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ‘தி இந்து தமிழ்’ நாளிதழுக்காக தொடர்பு கொண்டோம்.
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் கையிலெடுக்க என்ன காரணம்?
நான் மும்பையைச் சேர்ந்த அபினவ் பாரத் அமைப்பின் அறங்காவலர். இதற்கும் மும்பை உயர் நீதிமன்றத்தில் 2011-ம் ஆண்டு தொடர்ந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை. சமூக, கல்வி, வேலைவாய்ப்புக்காக போராடி வருபவன் நான். இந்த லட்சியங்களை அடைய நாட்டு மக்களின் ஒற்றுமை, மத நல்லிணக்கம் அவசியம். இதற்காக கடந்தகால சம்பவங்கள் குறித்தும் எனது சொந்தப் பணத்தை செலவு செய்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தியுள்ளேன். அதில் அறிந்த உண்மைகளை அடிப்படையாக வைத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பகையை உருவாக்க நடத்தப்பட்டதுதான் காந்தி கொலை என்பதை நிரூபிக்க வழக்கு தொடர்ந்துள்ளேன்.
காந்தி கொலை குறித்து, உங்கள் வாதத்துக்கு ஆதரவாக ஆராய்ச்சியில் என்ன ஆதாரம் கிடைத்தது?
இரண்டாம் உலகப் போரின் நெருக்கடிக்கு மத்தியில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை நடத்தியதற்காக காந்தி கொல்லப்பட வேண்டியவர் என்பது பிரிட்டிஷ் அரசின் கொள்கையாக இருந்தது. மேலும், பிரிட்டிஷ் அரசின் பொருளாதாரத்துக்கு எதிராகவும், இந்தியா - பாகிஸ்தான் பகையை குறைக்கவும் காந்தி முயற்சி எடுத்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கொல்ல ‘போர்ஸ் 136’ என்ற ரகசிய ஏஜென்சியை பிரிட்டிஷ் அரசு உருவாக்கியது. கம்யூனிச நாடுகளின் தூதர்கள் அனைவரும் பிரிட்டிஷ் அரசு தான் மகாத்மாவை கொன்றது என கருதினர். பிரிட்டிஷ் அரசிடம் இருந்த கொலைக்கருவி இறுதியில் மர்மமான முறையில் கோட்சே கைகளுக்கு வந்துள்ளது. எனவே, காந்தி கொலையில் பிரிட்டிஷ் அரசின் பங்கு விசாரிக்கப்பட வேண்டும். உண்மை உலகுக்கு தெரிந்தே ஆக வேண்டும்.
70 ஆண்டுகள் கடந்த பின்பு எடுக்கும் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?
உண்மையை கண்டறிய தாமதமான முயற்சியாக இருந்தாலும் தவறில்லை. ‘வாய்மையே வெல்லும்’ என்பது நமது நாட்டின் முழக்கம். அது 70 ஆண்டுகள் ஆனாலும் சரி; 700 ஆண்டுகள் ஆனாலும் சரி. கடந்த 1963-ம் ஆண்டு லோரன்கோ டி சலவடோர் வெளியிட்ட ‘ஹூ கில்டு காந்தி’ என்ற நூலில் உயர் பதவியில் இருந்தவர்களுக்கு காந்தி கொலையில் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதை மேலும் விசாரிப்பதற்கு பதில் அந்த நூலை தடை செய்தனர். அதை நீக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். உண்மை வெளிவரும் என்ற நம்புகிறேன்.
வேறு யாராவது கொலையாளி என்று கண்டுபிடிக்கப்பட்டால், அவரை தண்டிக்க முடியுமா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதே?
நிச்சயம் முடியாது. நான் யாரையும் தண்டிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா, சதி இருந்ததா? காந்தி - ஜின்னா சமாதான திட்டத்தை சீர்குலைத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே நிரந்தரப் பகையை உருவாக்க முயற்சி நடந்ததா? போன்ற அம்சங்களை விசாரிக்க கபூர் ஆணையம் நியமிக்கப்பட்டது. நிறைவடையாத இந்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும்.
நீங்கள் சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டு குறித்து?
முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. இதில் துளியும் உண்மை இல்லை.
கோட்சே பற்றியும் அவரது கொள்கைகள் பற்றியும் உங்கள் கருத்து?
அவர் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டுள்ளார். வீர் சாவர்க்கர் எழுதியுள்ள ‘மை டிரான்ஸ்போர்ட்டேஷன் பார் லைப்’ என்ற நூலில் தனது சிறை வாழ்க்கை இன்னல்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் வேறுபாடுகள் இருந்தாலும் நம்மில் ஒருவரை கொல்வது பாவம்; அதை யாரும் செய்யக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். காந்தி நம்மில் ஒருவர். அவரைக் கொன்றது பாவச்செயல். அதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
உங்கள் பார்வையில் கோட்சே நிரபராதி என்றால் அவர் எப்படி காந்தி கொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்?
தவறு. கோட்சே நிரபராதி என்று நான் சொல்லவே இல்லை. கோட்சேவுடன் தூக்கிலிடப்பட்ட ஆப்தே ஒரு குடும்பஸ்தர். அவருக்கு இரண்டு மனைவிகள், 2 குழந்தைகள். அவர் ஒரு நிரபராதி.அதை நிரூபிக்க வழங்கப்பட்ட உரிமையை மறுத்து, ஏன் இந்திய அரசு அவரை 15.11.1949-ல் தூக்கில் போட்டது? அதற்கான அவசரம் என்ன?
உங்கள் சட்டப் போராட்டத்தின் தற்போதைய நிலை?
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள அறிக்கைக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் எனக்கு அவகாசம் அளித்துள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 19-ம் தேதி வருகிறது.
உங்கள் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டால், உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?
நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். எனது கோரிக்கை நிராகரிக்கப்பட வாய்ப்பில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago