ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சித்த ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி கருத்து

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி மொத்தம் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த சூழலில் அக்கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுத்தீன் ஒவைசி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் நேற்று விமர்சித்தார்.

“வாழ்வில் ஒரு விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். யாரும் தனித்து வாழ முடியாது. வீட்டில் ஒருவர் நமக்காக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அடுத்தவர்கள் மீது அந்த விரக்தி வெளிக்காட்டப்படும். அப்படி நம் நாட்டில் இருவர் (ராகுல் காந்தி மற்றும் மோடி) உள்ளனர். அவர்களுக்கு வீட்டில் யாரும் இல்லை. அவர்களுக்கு நம் மீது விரக்தியை வெளிப்படுத்துவது தான் வேலை” என ஒவைசி தெரிவித்தார்.

முன்னதாக, தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியை கடுமையாக ஒவைசி விமர்சித்திருந்தார். அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் ஒவைசி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE