பழங்குடியின மக்களுக்கு ரூ.24,000 கோடியில் திட்டம்: நாளை தொடங்குகிறார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பழங்குடியின சமூக மேம்பாட்டுக் கான பிரத்யேக பிஎம் பிவிடிஜி (குறிப்பிட்ட மிகவும் பின்தங்கிய பழங்குடியின குழுக்கள்) என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

சுதந்திர போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்ற பழங்குடியின தலைவர்களை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 15-ம் தேதி ஜன்ஜாதியா கவுரவ் திவஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, பழங்குடியினரின் சமூக மேம்பாட்டுக்காக பிரத்யேகமாக ரூ.24,000 கோடியில் பிஎம் பிவிடிஜி என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

சுதந்திரத்துக்குப் பிறகு சமூக பொருளாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பழங்குடியின குழுக்களை கண்டறிந்து செயல்படுத்தப்படவுள்ள முதல் திட்டம் இதுவாகும்.

அவர்களின் சமூக-பொரு ளாதார நிலைமைகளை மேம்படுத் துவதை முதன்மையான நோக்க மாகக் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டின்போது வெளியானது.

குறிப்பாக, 9 அமைச்சகங்களின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. சுமார் 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 22,544 கிராமங் களில் (220 மாவட்டங்கள்) மிகவும்பாதிப்புக்கு உள்ளான பழங்குடியினத்தை சேர்ந்த 75 குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தொலைதூர, எளிதில் அணுக முடியாத பிவிடிஜி குடும்பங்களுக்கு, சாலை, தொலைத் தொடர்பு இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பான வீடுகள், சுத்தமான குடிநீர், சுகாதாரம், மேம்பட்ட கல்வி, ஊட்டச்சத்து, நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதே இந்த திட்டத்தின் அடிப்படையான நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE