புதுடெல்லி: தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததால் காற்றில் புகை மூட்டம் அதிகமானதால் உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியிலில் டெல்லி இடம் பெற்றுள்ளது. மேலும் இரண்டு இந்திய நகரங்களும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசுக்கு தனி இடம் உண்டு. பட்டாசு வெடிக்கப்படுவதால் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது போல இந்த ஆண்டும் தேசியத் தலைநகர் காற்று மாசு அளவில் முதலிடம் பிடித்தது. ஸ்விஸ் குழுவின் காற்று தரக்குறியீட்டு அளவின் படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 420 ஆக, ஆபத்தானது என்ற நிலையில் இருந்தது. ஆனால் இந்த முறை டெல்லியுடன், முதல் 10 இடங்களில் கொல்கத்தாவும், மும்பையும் இணைந்துள்ளன. கொல்கத்தா 196 என்ற காற்று தரக்குறியீட்டுடன் 4வது இடத்திலும், இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை 163 என்ற காற்று தரக்குறியீட்டுடன் 8வது இடத்திலும் இருக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே டெல்லியில் அடர்த்தியான புகை மண்டலம் உண்டாகி காற்றின் தரம் 680 என்ற மிகவும் ஆபத்தான நிலை என்பதைக் கடந்தது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது டெல்லியில் பட்டாசு வெடிக்க தடைவிதித்தாலும் அந்த தடை தீவிரத்துடன் அமல்படுத்தப்படுவதில்லை. இதனால் டெல்லியில் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு குளிர் காலத்துக்கு முன்பாகவும் காற்றின் தரம் மிகவும் மோசமடைகிறது. குளிர்ந்த காற்று, வாகனங்களின் புகை, தொழில்சாலைகள், கட்டுமானப் பணி தூசு மற்றும் வேளாண்மை கழிவுகளைகளை எரித்தல் போன்ற காரணிகளால் காற்று மாசு அடைகிறது.
» “உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு” - ராஜஸ்தான் முதல்வர் குற்றச்சாட்டு
இதனிடையே டெல்லியில் கடந்த வாரத்தில் மிகவும் மோசம் என்ற நிலையில் நீடித்து வந்த காற்றின் தரம் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் சற்றே மேம்பட்டிருந்தது. இதனால் ஒற்றை - இரட்டை இலக்க திட்டத்தை அதிகாரிகள் ஒத்திவைத்தனர். தீபாவளிக்கு பிறகான காற்று மாசு அதிகரிப்பால் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
காற்றின் தரக் குறியீடு400 - 500 ஆக இருந்தால், காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாக அர்த்தம். இந்த நிலையில் ஆரோக்கியமானமனவர்களும் பாதிப்படையும் நிலை ஏற்படும். காற்றின் தரம் 0 - 50 வரையில் இருந்தால், நன்றாக இருப்பதாக அர்த்தம்.
டெல்லியில் இன்றைய நிலவரம்: டெல்லியில் இன்று (நவ.13) காலை 7 மணிக்கு காற்றின் தரக்குறீயிடு 275 ஆக மோசம் என்ற நிலையில் இருந்தது. இதனிடையே ஷாதிபூரிலர் 315, அயநகரில் 311, லோதி சாலையில் 308, புசாவில் 355, ஜஹாங்கீர்பூரியில் 333 என மிகவும் மோசம் என்ற நிலையில் காற்றின் தரம் இருந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago