ஹரியாணா மாநிலத்தில் கள்ளச் சாராயம் அருந்திய 19 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சண்டிகர்: ஹரியாணா மாநிலம் யமுனா நகர் மற்றும் அம்பாலா ஆகிய மாவட்டங்களில் பஞ்சேடோ கா மஜ்ரா, பூஸ்கர், சரண், மண்டே பேரி ஆகிய கிராமங்களில் கள்ளச் சாராயம் புழங்கி வந்துள்ளது. கடந்த புதன்கிழமை இக்கிராமங்களில் கள்ளச் சாராயம் அருந்திய 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

ஹரியாணாவில் தற்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசை விமர்ச்சித்து வருகின்றன. இந்நிலையில், அம்பாலா மற்றும் யமுனாநகர் மாவட்ட காவல் துறை சிறப்பு குழுவை உருவாக்கி விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 போலி மதுபான பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காட்ட வேண்டும்: கள்ளச் சாராய தயாரிப்பு, விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் குறித்து கிராம மக்கள் புகார் அளிக்க தயங்குகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் காட்டினால், தங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று கிராம மக்கள் அஞ்சுகின்றனர் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE