தீபாவளி பண்டிகை | குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்தினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி திருநாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி மகிழ்ச்சி நிறைந்த பண்டிகை. இருளை ஒளியும், தீமையை நன்மையும், அநீதியை நீதியும் வென்றதைக் குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மதங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இந்த பண்டிகையை கொண்டாடி, அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பரப்புகின்றனர். கருணை மற்றும் அன்பின் அடையாளம் இந்தப் பண்டிகை. மனித குலத்தின் நலனுக்காக நமை உழைக்க தூண்டுகிறது இந்த பண்டிகை.

ஏழை மக்களுடன் நமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களிடத்தில் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரலாம். அனைவரும் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்ப உறுதிமொழி ஏற்போம் என தனது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE