அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இந்தியா வருகை: டெல்லியில் உற்சாக வரவேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இந்தியா வந்தடைந்தார். தனி விமானம் மூலம் டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை முறையே சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

ஆண்டனி பிளின்கனுக்கு வரவேற்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கனை வரவேற்கிறோம். 2+2 அமைச்சரவை ஆலோசனை 5வது முறையாக இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெறுகிறது. இந்த சந்திப்பு இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை, சர்வதேச அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE