டிச.4-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் டிசம்பர் 4 முதல் 22-ம் தேதி வரையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

2023-க்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 19 நாட்களில் மொத்தம் 15 அமர்வுகள் இருக்கும். இந்த அமர்வில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது என அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவு டிசம்பர் 3-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் அதற்கு மறுநாளே நாடாளுமன்றம் கூடுகிறது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த ஐந்து மாநில தேர்தல் அரை இறுதியாக பார்க்கப்படுகிறது. இத்தகைய நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE