காங்கிரஸ் கட்சிக்காக தென் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாகவும் மேலிடம் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் நடிகை விஜயசாந்தி தெரிவித்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சார்பில் மேதக் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு நடிகை விஜயசாந்தி வெற்றி பெற்றார். அதன் பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியை விட்டு விலகிய விஜயசாந்தி, தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். எனினும், அவரது ராஜினாமாவை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு விஜயசாந்தி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்காக தென் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். கட்சி மேலிடம் அனுமதி கொடுத்தால், தேர்தலிலும் போட்டியிடுவேன். நடிகர் பவன் கல்யாணின் சேவை தெலங்கானாவுக்கு தேவையில்லை. தெலங்கானா, ஆந்திராவில் அவரது அண்ணன் சிரஞ்சீவிக்கே மரியாதை இல்லை எனும்போது, பவன் கல்யாணின் நிலைமை பற்றி கூற வேண்டியதில்லை. இவ்வாறு நடிகை விஜயசாந்தி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago