பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம்: அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் கிருஷ்ணராஜபுரம், ஹென்னூர், கெங்கேரி, மாகடி உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

இந்தப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தரை தளத்தில் வெள்ளம் குளம் போல தேங்கியது. கம்மனஹள்ளி, சாந்தி நகர், மைசூர் வங்கி சதுக்கம், மல்லேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் சாலையோர மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கனமழை காரணமாக பெங்களூருவின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெல்லாரி சாலை, மைசூரு சாலை ஆகியவற்றில் உள்ள சுரங்கப் பாதைகளில் வெள்ளம் தேங்கியதால் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ஆகியவை மூழ்கின. சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், அலுவலகம் செல்வோரும் அவதிக்குள்ளாகினர்.

டி.கே.சிவகுமார் ஆய்வு: கனமழை கொட்டிய ந‌ள்ளிரவில் கர்நாடக துணை முதல்வரும் பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்தார். வெள்ள பாதிப்பு, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, நிவாரணம் ஆகியவைகுறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார். மேலும் கெங்கேரி, பனசங்கரி உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று ஆய்வு செய்தார்.

இதனிடையே நேற்று பிற்பகலிலும் பெங்களூருவில் கனமழை கொட்டித் தீர்த்தது. எலஹங்காவில் 160 மிமீ மழையும், கெங்கேரியில் 140 மிமீ மழையும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு பெங்களூருவில் கனமழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்