புதுடெல்லி: அண்டை நாடான நேபாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜாஜர்கோட், ரூகம் ஆகிய மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததில் 155 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் வலுவாக உணரப்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் அவற்றை விட்டு மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
இந்நிலையில் நேபாளத்தில் நேற்று மாலை 4.14 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட அதே பகுதியில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வடக்கே 233 கி.மி. தொலைவில் இதன் மையப் பகுதி அமைந்திருந்தது.
இந்த நிலநடுக்கம் டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியம் உட்பட வட இந்தியாவில் வலுவாக உணரப்பட்டது. டெல்லியில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களை விட்டு மக்கள் அலறியடுத்து வெளியே ஓடி வந்தனர்.
வட இந்தியாவில் 3 நாட்களில் இரண்டாவது முறையாக நேற்று வலுவான நிலடுக்கம் உணரப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago