ராய்காட்: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்மாவட்டத்தில் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் நேற்றுமுன்தினம் பயங்கர வெடி விபத்துஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேரை காணவில்லை. 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புளூ ஜெட் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து தயாரிப்பு ஆலை ராய்காட் மாவட்டத்தில் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் இந்த ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதையெடுத்து ஆலையில் தீ பரவியது. உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் ஆலையின் உள்ளே 57 பேர் இருந்தனர். அவர்களில் 46 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 11 பேரில் 7 பேர்உயிரிழந்துள்ளனர். ஆனால்4 பேர் காணவில்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா காவல் துறை கூறுகையில், “ஆலையில் பரவியை தீயை மாலைக்குள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். மொத்தம் 57 பேர் ஆலையின் உள்ளே இருந்துள்ளனர். அவர்களில் 46 பேரை பத்திரமாக மீட்டுவிட்டோம். நேற்று காலை 7 உடல்களை கண்டுபிடித்தோம். அடையாளம் காணமுடியாத அளவில் அந்த உடல்கள்எரிந்திருந்தன. இன்னும் 4 பேரைகாணவில்லை. அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. இந்தவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago