டெல்லியில் ஆட்சியமைக்க ஆர்எஸ்எஸ் எதிர்ப்பா?

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, டெல்லியில் குதிரை பேரத்தின் மூலம் ஆட்சி அமைத்தால் மக்கள் மத்தியில் களங்கம் உண்டாகும் என ஆர்.எஸ்.எஸ் கருதுவதாகக் கூறப்படுகிறது. எனவே, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு ஆட் சியை பிடிப்பதுதான் சரியாக இருக்கும் என பாஜகவின் தலை வர்களுக்கு அறிவுறுத்தி இருப்ப தாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறியதாவது: “மீண்டும் தேர்தல் வந்தால் வெற்றி பெற முடியாது என சில எம்எல்ஏக்கள் கருதுகின்றனர். இன்னும் சிலர் தமக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என பயப்படுகிறார்கள். இதன் காரணமாக, எப்படியும் ஆட்சி அமைத்து விடுவது என மேற்கொள்ளப்படும் முயற்சியை ஆதரிக்கவில்லை.

ஒருவேளை மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தால் அது மற்ற மாநில சட்டசபை தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதே மன நிலையில் பிரதமர் நரேந்திர மோடி யும் உள்ளார் என தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த ஒருசில நாட்க ளாக பாஜக மீது எழுந்த புகார்க ளால் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தம் எம்எல்ஏக்களை கவனமாக கண்காணித்து வரு கின்றனர். டெல்லியில் கடந்த பிப்ரவரி முதல் ஆறு மாதங்களுக் காக அல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி இம்மாத இறுதி யில் முடிவுக்கு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE