மார்ச் 31-க்குள் கட்டாயம்: கழிப்பறை இல்லாத வீடு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் - ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், இச்சாபுரத்தில் ஜன்மபூமி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகுதியான 2-வது நபருக்கும் மாத உதவித் தொகை வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும்.

தனியாக வசிக்கும் பெண்களுக்கும் மாத உதவித் தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக கழிப்பறை கட்டப்பட வேண்டும்.

காலக்கெடு முடிந்த பிறகு கழிப்பறை இல்லாத வீடுகள் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேன். குறிப்பாக ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், விஜயநகரம், சித்தூர், கடப்பா, கர்னூல், அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களில் கழிப்பறை வசதி குறைவாக உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் கழிப்பறைகளைக் கட்டிக்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், உங்களது ஊர்களுக்கு வருவேன். அங்கேயே தங்குவேன். கழிப்பறை இல்லா வீடுகள் முன்பு மவுன உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்